Who Am I? Answered
பிரபஞ்ச ரகசியங்களில் விடை தெரியாத முதல் பத்து இடங்களில் உள்ள தலைச் சிறந்தக் கேள்வியே நான் யார் எனும் இந்தக் கேள்வி.
தன்னை அறிந்தக் காலம் முதல், மனிதன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டதுதான் இந்த பிரம்ம ரகசியம்.
உலகில் எந்த மனிதராக இருந்தாலும் இந்த கேள்வியைக் கேட்பவரே உலகின் அறிவுலக மாமனிதர்.
படித்தவர், படிக்காதவர், தொழிலாளர், தொழில் அதிபர், சித்தர்கள், ஞானிகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று இதைக் கேட்காமல் விட்டவர்கள் மிகக் குறைவு.
நான் யார்?
நான் எங்கிருந்து வந்தேன்?
நான் எப்படிப் படைக்கப்பட்டேன்?
நான் எதற்காகப் படைக்கப்பட்டேன்?
என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
என் இறப்புக்கு பின் நான் எங்கு செல்வேன்?
எனக்கு முன் ஜென்மம், பின் ஜென்மம் உண்டா?
என்ன நடந்தால் நான் மீண்டும் பிறப்பேன்?
என்னுள் எதற்காக என்னைத் தேடுகிறேன்?
எல்லையில்லா பிரபஞ்சத்தில் எனக்கு இங்கு என்ன வேலை?
என பதிலைத் தேடி உலகெங்கும் விடைகளைத் தேடியவர்கள், தேடிக் கொண்டு இருப்பவர்கள் பல கோடி.
இத்தனைக் கோடி மனிதரிலே தன்னைத் தனக்குள் தேடி தங்கள் மூளையின் எல்லை வரை தேடியும் விடை கிடைக்காத அறிவுஜீவிகளுக்கு இந்த புத்தகம் விடை சொல்லப் போகிறது.
சாதாரண மனிதனையும் விஞ்ஞானம் போய் சேர வேண்டும், எல்லா மக்களும் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மிக எளிய முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம்.
நம் மனித மூளையின் ஞானக் கண்ணான மூன்றாம் கண்ணைத் திறந்து வைப்பதே ஒரு விஞ்ஞானியான எனது நோக்கம்.
இங்கு சொல்லப்படும் விடைகளால், உங்கள் மூளையில் ஏற்படும் ஒரு அறிவு ஒளி, உங்களை நிச்சயம் ஒரு மாறுபட்ட உலகில் பயணிக்க வைக்கும்.
இந்த புத்தகம், உலகின் மூத்த மொழியான தமிழில் தொடங்கி, ஆங்கிலத்திலும், பின்பு மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு புத்தகமாக வெளி வரப் போகிறது.
நம் உள்ளுக்குள்ளே ஒளிந்து கொண்டு நம்மையே விடைத் தேடச் சொன்ன நம் உயிரின் ரகசியம்தான் நான் யார் எனும் அந்த அதிசயம்.
பல ஆயிரம் ஆண்டுகளாய் பல கோடி மக்களின் தேடுதலாய் இருக்கும் இந்த கேள்விக்கு விடை இங்கே உயிர் பெறுகிறது.
இப்படிக்கு,
விஷ்ரவா பிரவீன்